மகேஷ் பாபு, நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி-ரிலீஸ் தேதி அறிவிப்பு

magesh babu

தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு, தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ‘வாரணாசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கடந்த 2022ம் ஆண்டு காலமானார். அவரது 4ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தந்தையை நினைவுகூர்ந்து சோஷியல் மீடியாவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் மகேஷ் பாபு.

குழந்தையில் தன்னை கையில் ஏந்தியபடி இருக்கும் பழைய கருப்பு, வெள்ளை போட்டோவை பகிர்ந்துள்ள மகேஷ் பாபு, ‘என்றென்றும் என் சூப்பர் ஸ்டார் என்று சுருக்கமாகவும், ஆழமான அர்த்தத்துடனும் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு பின்னால் உள்ள சுவாரசியமான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. கிருஷ்ணா ஹீரோவாக, நடித்த ‘போராட்டம்’ என்ற படத்தில், மகேஷ் பாபு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

Share this story