மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் டைட்டில் பிரச்சினை-எந்த படம் தெரியுமா ?
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, முன்னாள் உலக அழகியும் மற்றும் பாடகியுமான பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வரும் பான்வேர்ல்ட் படம், ‘வாரணாசி’. இ்ந்த தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதாக சொல்லி, தெலுங்கு இயக்குனர் சுப்பா ரெட்டி புகார் அளித்தார். ‘இந்த தலைப்பை கடந்த 2023ம் ஆண்டு பதிவு செய்திருந்தோம். பிறகு கடந்த ஜூலையில் புதுப்பித்தோம்.
பிறகு எப்படி இந்ததலைப்பை அவர்கள் பயன்படுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதனால், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் படத்துக்கு ‘ராஜமவுலியின் வாரணாசி’ என்று தலைப்பை மாற்றியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், திடீரென்று இந்த பிரச்னைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட்டுள்ளது.
‘வாரணாசி’ தலைப்புக்கான உரிமையை எஸ்.எஸ்.ராஜமவுலியின் வசம் ஒப்படைத்துள்ள சுப்பா ரெட்டி கூறுகையில், ‘எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர் மகேஷ் பாபு, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோரின் பிரமாண்டமான படத்துக்கு சிறிய அளவிலாவது பங்களிக்க முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

