26 நிமிடங்களில் 1 மில்லியன் வியூவ்ஸ்.. வெளியானது வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ..

varisu - Vijay

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய், தற்போது தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.  இதில் விஜய்க்கு ஜோடியாக  நடிகை ராஷ்மிகா மந்தனா  நடிக்கிறார். மேலும்  இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

 
 varisu - Vijay
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க, இந்தப் படம் மூலம்  எஸ். தமன்,  முதன்முறையாக தளபதி விஜய்க்கு   இசையமைக்கிறார். வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும்நிலையில்,  இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  ஆனால் அதன்பிறகு எந்த  அப்டேட்டும்  வரவில்லை. அதேநேரம்  விஜய் ரசிகர்கள் அடுத்த அப்டேட் எப்போது வருமென  ரசிகர்கள் படக்குழுவினரை டேக் செய்து சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.  இதற்கிடையே  வாரிசு படத்தின் தொலைக்காட்சி உரிமம்,  டிஜிட்டல் உரிமம், ஆடியோ உரிமம் தொடர்பான விற்பனைகள் முடிந்துவிட்டன.

vijay - Varisu

கடந்த தீபாவளியன்று விஜய்யின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தது.  இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்  வெளியிட  படக்குழு  திட்டமிட்டுள்ளது.    வாரிசு படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என ஏற்கனவே   தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில்,  தற்போது  ‘ரஞ்சிதமே.. ரஞ்சிதமே’ எனத்தொடங்கும் பாடலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.  பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில், தமன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை  விஜய் பாடியிருக்கிறார். ஃபர்ஸ்ட் சிங்கிள் முழு பாடல்  வருகிற 5ம் தேதி ( நாளை மறுநாள்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ப்ரோமோ வீடியோ வெளியான 26 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது..

Share this story