26 மில்லியன்களை கடந்த ‘ரஞ்சிதமே’ பாடல்.. யூடியூப்பிலும் முதலிடம் பிடித்து சாதனை !

Ranjithame

 விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ரஞ்சிதமே பாடல் யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. 

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரித்து வருகிறார். குடும்ப பின்னணிக் கொண்ட படமாக உருவாம் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

Ranjithame

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், குஷ்பூ, யோகிபாபு, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது. ரஞ்சிதமே என தொடங்கும் இந்த லிரிக்கல் பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி பாடியுள்ளார். பாடலாசிரியல் விவேக் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் வெளியாகி சில நாட்களாகியும் யூடியூப்பில் தொடர்ந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று 26 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.   

 

 

Share this story