‘தியேட்டர் சீட்ல யாரும் உட்கார மாட்டீங்க’.. ‘ரஞ்சிதமே’ பாடல் குறித்து ஆர்ப்பரிக்கும் தமன் !

Ranjithame

‘ரஞ்சிதமே’ முழு பாடலை முழுமையாக பார்த்தால் யாரும் சீட்ல உட்கார மாட்டீங்க என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். 

விஜய் மற்றும் வம்சி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. குடும்ப பிண்ணனியில் உருவாகி வரும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

Ranjithame

இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ‘வாரிசு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. விஜய் மற்றும் மான்சி இணைந்து பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் யூடியூப்பிலும் சாதனை படைத்து வருகிறது. 

Ranjithame

இந்நிலையில் இந்த பாடல் குறித்து உற்சாகமாக பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இப்போதுதான் ரஞ்சிதமே முழு வீடியோ பாடல் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உட்கார மாட்டீங்க. உங்களோடு நானும் ஒரு ரசிகனா நடனமாட போகிறேன். பின்னி பெடல்தான் என்று குறிப்பிட்டுள்ளார். தமனின் இந்த பதிவு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


 

Share this story