இதுதான் உண்மையான பொங்கல்... இணையத்தை தெறிக்கவிடும் விஜய் - அஜித் ரசிகர்கள் !

varisu vs thunivu

'வாரிசு' மற்றும் 'துணிவு' திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் படிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. முதல்முறையாக நடிகர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி தூக்கி வருகிறார். தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

varisu vs thunivu

இதேபோன்று எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் 'துணிவு'. பொங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ள நிலையில் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

varisu vs thunivu

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்பெல்லாம் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் திரையரங்குகளில் மோதல் இருக்கும். அந்த நிலை மாறி தற்போது இணையத்தை ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். நிஜமாகவே இந்த பொங்கல் தல தளபதி ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

Share this story