‘துணிவு‘, ‘வாரிசு‘ படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்கீடா ?... திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் !

thunivu

துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு விட்டதாக வந்த தகவலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் எப்போதும் எதிர்பார்ப்பு ஏற்படும். அதுவும் இந்த இரண்டு ஹீரோக்கள் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானதால் எப்படி இருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை. 

thunivu

அந்த வகையில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு‘ படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் பண்டிகை தினத்தில் ஒன்றாக வெளியாகவுள்ளது. அதனால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வமுடன உள்ளனர். 

thunivu

அஜித்தின் துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. அதனால் இப்படம் தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும், ஆனால் ‘வாரிசு’ படத்திற்கு இன்னும் திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. 

சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த தகவலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் இன்னும் எந்த திரையரங்கமும் ஒதுக்கவில்லை. திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது என்று கூறினார். 

 

Share this story