வாரிசு படத்தின் ஆடியோ உரிமத்தை கைப்பற்றியது இந்த நிறுவனம் தானாம்...!!

Varisu

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் வாரிசு.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அத்துடன் பிரபு ,சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷியாம், யோகி பாபு ,சங்கீதா என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  

varisu

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன்  இசையமைத்துள்ளார்.  கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை பாலிவுட்டின் பிரபல ஆடியோ வெளியீட்டு நிறுவனமான Tseries நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10  கோடிக்கு ஆடியோ உரிமத்தை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.இந்த படத்தின் ஐரோப்பா முழுமைக்குமான ரிலீஸ் உரிமத்தை சீசன்ஸ் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story