துள்ளலான ஆட்டத்திற்கு தயாராகுங்க.. ‘வாரிசு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வரப்போகுது !

varisu

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

வழக்கமாக ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், தற்போது குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சரத்குமார், ஷ்யாம், குஷ்பூ, பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

varisu

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி பணிள் நடைபெற்று வருவதால் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. அதனால் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. 

varisu

இந்நிலையில் தமன் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. அதில் முதல் பாடல் தாறுமாறாக உருவாகி வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தமன் தெரிவித்திருந்தார். அந்த வகையில் ‘வாரிசு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை. 

 

Share this story