உலகம் முழுவதும் 300 கோடி.. ‘வாரிசு’ படத்தை கொண்டாடும் ரசிகர்கள் !

varisu

 விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் 300 கோடி வசூலித்துள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 11-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாரிசு’.‌ தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப பின்னணியில் உருவாகி வெற்றிப் பெற்றுள்ள இந்த படத்தில் ஆக்ஷன், எமோஷனல், காதல் ஆகியவை இடம்பெற்றது. 

varisu

இந்த படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.‌ இந்த படத்தில் தமன் இசையில் உருவான ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

25 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் தற்போது 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘வாரிசு’ படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்ட நிலையில் இந்த வசூல் சாதனை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story