மனைவியுடன் 'வாரிசு' படம் பார்க்க சென்ற விஜய்... அலைக்கழித்த படக்குழுவினரால் உச்சகட்ட கோபம் !

vijay

'வாரிசு' திரைப்படத்தை தனது மனைவியுடன் நடிகர் விஜய் பார்க்க சென்றபோது அலைக்கழிக்கப்பட்டதால் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தெலுங்கு முன்னணி வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 vijay

இந்த படம்  பொங்கலையொட்டி நாளை காலை 4 மணிக்கு உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடியுள்ளனர். பெரிய கட்அவுட் வைத்து விஜய் படங்களுக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் இப்படத்தை பார்க்க நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரும் மயிலாப்பூரில் உள்ள பிரபல திரையரங்கிற்கு சென்றனர். அங்கு இரண்டு மணி காத்திருந்தும் சில காரணங்களால் வாரிசு படம் திரையிடப்படவில்லை. இதனால் படக்குழுவினரை கடிந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு 'வாரிசு' படத்தை பார்த்துவிட்டு கோபமாக இரவு 8.30 மணிக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story