“The Real Boss” – வாரிசு திரைப்படத்தின், நீக்கப்பட்ட காட்சி வெளியீடு.

தளபதி விஜய் மற்றும் வம்சி கூட்டணியில் வெளியாகி மாஸ்காட்டிவரும் திரைப்படம் “வாரிசு’. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி சற்றுமுன்பு வெளியானது.
இந்த காட்சியில் விஜய், பிரகாஷ் ராஜ் இடையிலான நடக்கும் ரிவெஞ்ச் சீன் இடம்பெற்றுள்ளது. பக்கா மாஸ்ஸாக வெளியான இந்த காட்சி நிச்சயம் விஜய் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
வாரிசு திரைப்படத்தில் விஜய் தவிர, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் கூட இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.