'வாரிசு' படத்தை பார்த்து கண்ணீர் விட்டேன் - வைரலாகும் தமனின் ட்விட்டர் பதிவு !

varisu

'வாரிசு' படத்தை பார்த்து கண்ணீர் விட்டேன் என்று இசைப்பாளர் தமன் போட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜய், தற்போது குடும்ப உறவுகள் பற்றி பேசும் படத்தில் நடித்துள்ளார். ‘வாரிசு’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படம் நாளை அதிகாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.  இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கியுள்ளார்.

https://twitter.com/MusicThaman/status/1612740094468960257?t=MprEPvoZ7miNFmkcpfz1-Q&s=09

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜூவின் வெங்கடேஸ்வரா தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியா ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளது. இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் தீ தளபதி மற்றும் ரஞ்சிதமே ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்  இசையமைப்பாளர் தமன் இன்று மாலை வெளியிட்ட ட்விட்டர் தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் விஜய் அண்ணா உங்களை திரையில் பார்த்தபோது உணர்ச்சி வசப்பட்டேன். அதன்பிறகு சில காட்சிகளில் கண்ணீர் வந்துவிட்டது என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ள நிலையில் தமனின் அந்த பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

 


 

Share this story