'வாரிசு' வெளியாவதில் சிக்கல். விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் தமிழ் திரையுலகம் !

vijay

 'வாரிசு' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் களமிறங்கியுள்ளது. 

தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் :வாரிசு'. தமிழ் மற்றும் தெலுங்கு உருவாகும் இந்த படம் வாரசுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகவுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும்‌ என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

vijay

இதற்கிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தில் ராஜூ, பொங்கல் மற்றும் தசரா ஆகிய பண்டிகை தினங்களில் டப்பிங் படங்கள் நிறைய அளவில் வெளியாவதால் தெலுங்கு படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதில்லை. அதனால் பண்டிகை தினங்களில் தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னெரிமை என்று கூறினார். சமீபத்தில் இந்த விஷயத்தை தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானமாக இயற்றியுள்ளது. 

இதனால் 'வாரிசு' படத்தை தயாரித்துள்ள தில் ராஜூவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தெலுங்கு திரையுலகின் செயலை கண்டித்தும், விஜய்யின் ஆதரவாகவும் தமிழ் திரையுலகினர் இறங்கியுள்ளனர்.  இந்நிலையில் 'வாரிசு' பட விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் தெலுங்கு திரையுலகை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

Share this story