‘வாரிசு’ படத்தை பார்த்த பிரபல தெலுங்கு நடிகர்... போனில் அழைத்து விஜய்க்கு பாராட்டு !

varisu

 ‘வாரிசு’ படத்தை பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், விஜய்யை பாராட்டியுள்ளார். 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. குடும்ப பின்னணி கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

varisu

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம் சரண், விஜய்யை பாராட்டியுள்ளது. இது குறித்து வெளியான தகவலில்,  சமீபத்தில் சென்னை வந்த ராம்சரணுக்கு ‘வாரிசு’ படத்தைத் காட்டியிருக்கிறார் தில் ராஜூ. படத்தைப் பார்த்த ராம்சரணும் ஆச்சரியமாகி, விஜய்யை போனில் கூப்பிட்டுப் பாராட்டி மகிழ்ந்துள்ளார். 

varisu

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘ஆர்சி 15’ படத்தை தில் ராஜூ தான் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் படம் இந்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

Share this story