வெறித்தனம் செய்யப்போகும் தளபதி... ‘வாரிசு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

varisu

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் தில் ராஜூ இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்டில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

varisu

நேற்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. 

இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தை தமிழில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி முதல் ஷோ ஜனவரி 11-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் இதே தேதியில் தான் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story