‘வாரிசு’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு.

photo

இயக்குநர் வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’ இந்த படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.  தில் ராஜு தயாரிப்பில், ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

photo

குடும்பங்கள் கொண்டாடும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக வெளியாகி இருந்த வாரிசு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

photo

இந்த நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது, அந்த காட்சியில் யோகிபாபு, ராஷ்மிகா, விஜய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். லவ் காமெடி கலந்த இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில் ஹைலைட்டே " ஸ்டாட்டிங் இருக்கு எண்டிங் இருக்கு, எமோஷன்ஸ் இருக்கு, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி" என விஜய் பேசும் வசனம் தான். 

 

Share this story