Soul Of Varisu : ‘வாரிசு’ அம்மா வீடியோ பாடல் வெளியீடு

varisu

 விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் Soul of varisu என்ற அம்மா பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். அவரது இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

varisu

கடந்த பொங்கலையொட்டி ஜனவரி 11-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியான இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

varisu

இந்நிலையில் தமன் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் அம்மா பாடல். மனதை உருக்கும் இந்த பாடலை பிரபல பாடகி சித்ரா பாடியிருந்தார். தற்போது இந்த பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Share this story