புதிய சாதனை படைத்த 'வாரிசு' அம்மா பாடல்... உற்சாகத்தில் படக்குழுவினர் !

varisu

'வாரிசு' படத்திலிருந்து  வெளியான அம்மா பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.  

விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், குஷ்பூ, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

varisu

இந்நிலையில் இப்படத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள அம்மா பாடல் சமீபத்தில் வெளியானது. பிரபல பாடகி சித்ராவின் மயக்கும் குரலில் இந்த பாடலை பாடியிருந்தார். பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலை மனதை உருக வைக்கும் வகையில் இருந்தது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த பாடல் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி இப்பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இது படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது. 

 

Share this story