மூன்றாவது வாரத்தில் 300கோடியை நெருங்கும் ‘வாரிசு’ – இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமு.

photo

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த பொங்கலை முன்னிட்டு  வெளியான இளையதளபதியின் வாரிசு திரைப்படம், ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

photo

இன்று கூட பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக படம் ஓடிக்கொண்டுள்ளது. உதாரணமாக, ஓசூர் லட்சுமி தேவி திரையரங்கில் 17 நாட்களை  கடந்தும் ஹவுஸ்புல் காட்சிகளாக படம்  ஓடுகிறது. அதேபோல  பாண்டிச்சேரி பிவிஆர் திரையரங்கில், மற்ற திரைப்படங்களை விட இரு மடங்கு அதிகமான காட்சிகள் வாரிசு படத்திற்காக திரையிடப்பட்டு வருகின்றனஇப்படி ரசிகர்களின் கொண்டாட்ட மழையில் நனைந்து வரும் இந்த படம் வெளியான மூன்றே வாரத்தில் 300 கோடியயை நெருங்கி வருகிறது.

photo

விரைவில் 300 கோடியயை எட்டும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த விஜய் தற்போது குடும்ப பின்னணியை மைய்யமாக கொண்டு நடித்துள்ள வாரிசு படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறியுள்ளது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story