துணிவை மிஞ்சிய வாரிசு... ஒரு மணி நேரத்தில் இத்தனை வியூஸ்களா ?

varisu

‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் ஒரு மணி நேரத்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

 தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

varisu

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்துள்ளார். இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 50 லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது. அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் ஒரு மணி நேரத்தில் 30 லட்சம் வியூஸ்களை பெற்ற நிலையில் ‘வாரிசு’ டிரெய்லர் அதை மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story