தரமான சம்பவம் இருக்கு... ‘வாரிசு’ டிரெய்லர் குறித்து முக்கிய அப்டேட்

varisu

 விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்டேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 

varisu

குடும்ப உறவுகள் குறித்து பேசும் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த டிரெய்லர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதற்கிடையே ‘வாரிசு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story