‘துணிவு’ படத்தின் வில்லன் நான் தான் - நடிகர் ஷாம் கொடுத்த சுவாரஸ்சிய தகவல் !
துணிவு படத்தில் முதலில் நான் தான் வில்லனாக நடிக்கவிருந்ததாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.
‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு அண்ணாக நடிகர் ஷாம் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் ஷாம், சுவாரஸ்சியமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், நாளுக்கு நாள் இளமை ஆகிக்கொண்டே செல்கிறீர்கள் ? என்ன மாதிரியான உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள் ?.. என விஜய் அண்ணாவிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு பதிலளித்த அவர், தினசரி பூரி, பொங்கல் தான் சாப்பிடுகிறேன். எப்போதாவது உடற்பயிற்சி செய்வேன் என்றார்.
‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றவுடன் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். அதில் என்ன ஸ்பெஷல் என்றால் தன் கையாலேயே சமைத்து கொடுத்தார். இது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘வாரிசு’ படத்தோடு துணிவு படமும் வெளியாகவுள்ளது என்று நான் கூறிய போது மிகவும் சந்தோஷப்பட்டார். அதோடு முதலில் துணிவு படத்தில் வில்லனாக நடிக்க எனக்கு தான் அழைப்பு வந்தது. ஆனால் வாரிசு மற்றும் துணிவு படத்தின் படப்பிடிப்பு தேதிகள் ஒரே நேரத்தில் இருந்ததால் மறுத்துவிட்டேன். அந்த கதாபாத்திரத்தில் என்னை யோசித்ததற்கு இயக்குனர் எச் வினோத்திற்கு நன்றி என தெரிவித்தார்.