திக்குமுக்காடி போய் நிற்கும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு:

thilraju

தெலுங்கில் வாரிசு படத்தை வெளியிடுவதில் தில் ராஜுவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

varisu

தளபதி விஜய் நடிப்பில் ,இயக்குநர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம்வாரிசு’. இந்த படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். தில் ராஜூ தயாரித்துவரும் இந்த படத்தின் இசையமைப்பாளராக தமன் பணியாற்றுகிறார்.இவரது இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றன. படம் அடுத்த வருடம் பொங்களை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர், அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளது.

telugu

இந்த நிலையில் வரும் பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவியின் 'வால்ட்டர் வீரைய்யா', நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ம ரெட்டி' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதுஇதனால் விஜயின் வாரிசு படத்திற்கு  தெலுங்கில் கடும் போட்டி நிலவுகிறது. அதே போன்று திரையரங்கங்கள் ஒதுக்குவதிலும்  போட்டி நிலவுகிறது.

telugug

அப்படியே!.. தில் ராஜு தனது செல்வாக்கை பயன்படுத்தி 'வாரிசு' படத்தை அதிக தியேட்டரில் வெளியிட்டாலும் கூட  மற்ற  படத்திற்கு ரசிகர்கள் காட்டும் ஆர்வம்  விஜய்யின் வாரிசு படத்திற்கு இருக்காது என சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்களாம். இதனால் தயாரிப்பாளர் தில் ராஜு என்ன செய்வதென்று  தெரியாமல் கதிக்கலங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story