ஆட்ட நாயகனாக 50வது நாளில் – அடித்து நொறுக்கும் “தளபதி விஜய்”.

photo

தளபதி விஜய் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி வெளியான திரைப்படம் ’வாரிசு’. இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். தல அஜித்குமாரின் ‘துணிவு’ திரைப்படத்திற்கு போட்டியாக வெளியான இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களின் பேராதரவை பெற்றது.  ஐந்து வாரத்திற்கு மேலாக படம் திரையரங்கில் கலெக்ஷனை அள்ளிய நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைம்மில் வெளியானது.

photo

வாரிசு திரைப்படம் ஓடிடியில் வெளியானாலும் கூட தமிழகத்தில் பல திரையரங்குகளில் மூன்று காட்சிகளும் ஓடின. இந்த நிலையில் இன்று வாரிசு தனது 50வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழ் நாட்டில் 25 திரையரங்குகளில் 50வது நாளை தொட்டுள்ளது வாரிசு, படத்தை ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.

photo

இப்படியாக வெற்றி படத்தை கொடுத்த விஜய் தற்போது லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை எதிநேக்கி ரசிகர்கள் காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

 

Share this story