பட்டையை கிளப்பிய வாரிசு ‘தீ தளபதி’ பாடல்.. வீடியோ வெர்ஷன் வெளியீடு !

thee thalapathy song

‘வாரிசு’ படத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ‘தீ தளபதி’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. குடும்ப சென்டிமெண்டில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியானது. தில் ராஜூ தயாரித்திருந்த இந்த படத்தில் சரத்குமார், ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

thee thalapathy song

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ‘வாரிசு’ படத்தை பார்த்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. 

thee thalapathy song

இந்த படத்தில் தமன் இசையில் உருவான வெளியான லிரிக்கல் பாடலான ‘தீ தளபதி’ வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. யூடியூப்பில் இந்த பாடலை 5.8 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் இந்த பாடலின் வீடியோ வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலை சிம்பு பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story