வாரிசா... துணிவா... எது முதலில் வெளியாகிறது ?

varisu vs thunivu

'வாரிசு' மற்றும் 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களில் முதலில் எந்த படம் வெளியாகிறது என்ற தகவல் கசிந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம். அதிலும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதி வெளியாகிறது சொல்லவே தேவையில்லை. ஏனென்றால் ரசிகர்கள் அந்த அளவிற்கு உற்சாகமாக இருக்கின்றனர். 

varisu vs thunivu

இந்த இரண்டு திரைப்படங்களும் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இப்படங்கள் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களை வெளியிட ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி திரையரங்கு வாசல்களில் பெரிய கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 

varisu vs thunivu

பொதுவாக பெரிய படங்கள் வெளியாகிறது என்றால் சிறப்பு காட்சிகள் இருக்கும். அந்த வகையில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களின் சிறப்புக்காட்சிகள் திரையிடப்படவிருக்கிறது. இதில் எந்த படம் வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் அஜித்தின் 'துணிவு' திரைப்படம் தான் முதலில் வெளியாகவிருக்கிறது. இரவு 1 மணிக்கே 'துணிவு' படத்தின் சிறப்புக்காட்சி வெளியாகவிருக்கிறது. இதையடுத்து விஜய்யின் 'வாரிசு' அதிகாலை 4 மணிக்கு வெளியிடப்படவிருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த சிறப்புக்காட்சியின் டிக்கெட் விலை 2500 ரூபாய் என நிர்ணிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Share this story