நல்ல செய்தி சொன்ன பிரபல நட்சத்திர ஜோடி வருண் கோனிடலா - லாவண்யா...!

varun tej

தெலுங்கு திரையுலக நடிகர் வருண் தேஜே - நடிகை லாவண்யா திரிபாதி ஜோடிக்கு குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை லாவண்யா திரிபாதி கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தெலுங்கு நடிகர் வருண் தேஜை திருமணம் செய்துக் கொண்டார். இத்தாலியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் சிரஞ்சீவியின் கொனிடேலா குடும்பத்தின் அங்கத்தினரான  சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் படையெடுத்து தம்பதிகளை வாழ்த்தினர்.  

varun tej
இந்நிலையில்,  லாவண்யா திரிபாதி தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். வருண் தேஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Life's Most Beautiful Role' என பதிவிட்டு தனது மனைவி லாவண்யா திரிபாதியுடன் இணைந்து குட்டி ஷோவில் கை வைத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


 

Share this story