வருணன் படத்தின் ' ஆசம் பீலு' பாடல் வெளியானது
1737203360598
இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் பாடலான காதலே மற்றும் கோளாரு ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான ஆசம் பீலு பாடல் வெளியாகியுள்ளது.
படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம சந்தோஷ் மேற்கொண்டுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

