வருணன் படத்தின் "முடியாதே" பாடல் வெளியீடு

ஜெயவேல்முருகன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரில்லா நடித்துள்ள ‘வருணன்’ படத்தின் "முடியாதே" பாடல் வெளியாகி உள்ளது.
இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே படத்தின் பாடலான காதலே, ஆசம் ஃபீலு மற்றும் கோளாரு ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'வருணன்' படத்தின் 'முடியாதே' எனத்தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.