10 ஆண்டுகளை நிறைவு செய்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

10 ஆண்டுகளை நிறைவு செய்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் விதமாக, நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் படத்தை பார்த்து  செல்ஃபி எடுத்துக் கொண்டாடினார். 

சின்னத்திரையில் தனது திறமையால் ரசிகர்களிடம் புகழ் பெற்ற சிவகார்த்திகேயன் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அப்படி 2013 ஆம் ஆண்டு வெளியானது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.இந்த படத்தை பொன்ராம் இயக்கி திரைத்துறையில் அறிமுகமானார். மேலும் நடிகையாக ஸ்ரீதிவ்யா அறிமுகமாக, சூரி, சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு வசனம் எழுதியிருந்தார் இயக்குநர் எம்.ராஜேஷ். தொடக்க பாடலான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார். மேலும் ஊதா கலரு ரிப்பன், பார்க்காத பார்க்காத, கண்ணால சொல்லுற பாடல் என அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் மிகப்பெரிய இடம் பிடித்த இந்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிறப்புக்காட்சியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் திரையிடப்பட்டது. அந்த படத்தை ரசிகர்களோடு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டு ரசித்தார். பின் அவர்களுக்கு கையசைத்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.


 

Share this story