ஹாரர் த்ரில்லர் படத்தில் வசந்த் ரவி... ‘அஸ்வின்ஸ்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு !

தரமணி, ராக்கி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் வசந்த் ரவி. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் நடிகர் சத்யராஜூடன் இணைந்து ‘வெப்பன்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு வசந்த் ரவி நடிக்கும் புதிய படம் ‘அஸ்வின்ஸ்’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இளம் இயக்குனர் தருண் தேஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் விமலாராமன் கதாநாயகியாக நடிக்கிறார். ஹாரர் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறார்.
தற்போது இந்த படத்தின் போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.