மெடிக்கல் க்ரைம் படத்தில் வசந்த் ரவி.. புதிய படத்தை தொடங்கி வைத்த அமீர் !

vasanth ravi

 வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் அமீர் தொடங்கி வைத்தார். 

vasanth ravi

‘தரமணி’ படத்தின் மூலம் பிரபலமானவர் வசந்த் ரவி. ராக்கி, அஸ்வின்ஸ், ஜெயிலர் உள்ளிட்ட படங்களை நடித்துள்ள அவர், தற்போது தனது 7வது படத்தில் நடிக்கவுள்ளார். ஐரா, நவரசா உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சபரீஷ் நந்தா இந்த படத்தை இயக்கவுள்ளார். 

vasanth ravi

இந்த படத்தில் வசந்த் ரவிக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் பிரபலமான அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நடன இயக்குனர் கல்யாண் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

vasanth ravi

இந்த படத்திற்கு அஜ்மல் தசீன் இசையமைக்கிறார். இன்னும் தலைப்பு வைக்காத இந்த படத்தை ஜெ.எஸ்.எம்.புரொக்ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த படத்தின் முதல் காட்சியை இயக்குனர் அமீர் தொடங்கி வைத்தார். 

vasanth ravi

 

 

 

 

 


 

Share this story