தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ள வசந்த் ரவி... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

vasanth ravi
வசந்த் ரவி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளளது.

தரமணி, ராக்கி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் வசந்த் ரவி. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் நடிகர் சத்யராஜூடன் இணைந்து ‘வெப்பன்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

vasanth ravi

இந்த படத்திற்கு வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இளம் இயக்குனர் தருண் தேஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் விமலாராமன் கதாநாயகியாக நடிக்கிறார். 

ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘அஸ்வின்ஸ்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தின் வித்தியாசமான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.    

Share this story