வசந்த் ரவி நடிக்கும் அடுத்த திரைப்படம்

வசந்த் ரவி நடிக்கும் அடுத்த திரைப்படம்

ஜெயிலர் படத்தை தொடர்ந்து வசந்த் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.

தமிழ் சினிமாவில் தரமணி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. அதன் பின், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ராக்கி என்ற படத்தில் நடித்தார். அண்மையில் வெளியான அஸ்வின்ஸ் என்ற திகில் படத்தில் நடித்ததன் மூலம், ரசிகர்களை கவர்ந்தார் வசந்த் ரவி. இதை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில், ரஜினிக்கு மகனாக வசந்த் ரவி நடித்து அப்ளாஸ் அள்ளினார். ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அவர் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சவாரி மற்றும் வெள்ளை ராஜா படங்களை இயக்கிய குஹன் சென்னியப்பன் இயக்கும் வெப்பன் என்ற புதிய படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story