'பாபி சிம்ஹா'வின் ‘வசந்த முல்லை’ திரைப்படத்தின் ‘நான் யார்’ லிரிக்கள் பாடல் வெளியீடு.

photo

எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம்வசந்த முல்லை’. பாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்

photo

அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் தயாராகியுள்ள 'வசந்த முல்லை' திரைப்படம் பிப்ரவரி மாதம்  10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஃபஸ்ட்லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படத்திலிருந்து ‘நான் யார்’ படத்தின் லிரிக்கள் வீடியோ வெளியாகியுள்ளது. கார்த்திக் நேத்தா வரிகள் அமைத்துள்ள இந்த பாடலை ராஜேஷ் முருகேசன் படியுள்ளார்.  தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

பாபி சிம்ஹா நடித்துள்ள ‘வசந்த முல்லை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story