வசந்தபாலனின் ‘அநீதி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் எப்போது ?.. முக்கிய அறிவிப்பு !

aneethi

 வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் ‘அநீதி’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அநீதி’. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், நடிகர் அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா. காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

aneethi

 ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் நால்வருடன் இணைந்து ‘Urban Boyz‘ என்ற நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் இப்படத்தின் முக்கிய அப்டேட் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த அப்டேட்டுகளை வெளியிடவும் படக்குழு தயாராகி வருகிறது.

Share this story