ஹாரர் த்ரில்லரில் மிரட்டும் ‘வசந்தமுல்லை’... ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

vasantha mullai

பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள ‘வசந்தமுல்லை’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள ‘வசந்தமுல்லை’. ஒரு ஓட்டலில் நடக்கும் த்ரில்லர் சம்பவத்தை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை குறும்பட இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.

vasantha mullai

இந்த படத்தில் கதாநாயகனாகவும், நடிகர் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். எஸ்.ஆர்.டி.எண்டர்டையின் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

vasantha mullai

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழியில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.  சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story