வாஸ்கோடகாமா ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!
1725522052000
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அண்மையில் நகுல் நடிப்பில் வெளியானது வாஸ்கோடகாமா திரைப்படம். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். படத்தின் ஓடிடி ரிலிஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகவுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகிறது. அமேசான் பிரைமிலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.