வாழை படத்தின் அடுத்த பாடல் - ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு
'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கி உள்ளார்.மாரி செல்வராஜ் தற்பொழுது 'வாழை' என்ற படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்
இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். சந்தோஷ் நாராயணன் 'வாழை' படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. இதுதொடர்பாக மாரி செல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,நாளை மாலை 6 மணிக்கு 3-வது பாடலான 'ஒத்தச் சட்டி சோறு' வெளியாகிறது என கூறியுள்ளார். மேலும் இப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஒத்தச் சட்டி சோறு 🍚
— Mari Selvaraj (@mari_selvaraj) August 4, 2024
A pot of rice
A stain of mud
In between these two
Life leaps and smiles... ✨#Vaazhai's 3rd single #OthaSattiSoru on 5th August! ✨🌸 @mari_selvaraj @Music_Santhosh @Lyricist_Vivek @navvistudios @disneyplusHSTam@RedGiantMovies_ @thinkmusicindia… pic.twitter.com/N6udVVE6s1