வாழை படத்தின் டிரைலர் அப்டேட்
`பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினர். மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது 'வாழை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில், இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
It's been a long exciting journey and after #Thenkizhakku #OruOorulaRaja #OthaSattiSoru and #Padhavathi the wait is almost over! Thrilled to finally present Vaazhai to you all!! Dropping the trailer tomorrow!! 🌸✨#Vaazhai #trailerfromtomorrow✨#VaazhaifromAug23 🩶… pic.twitter.com/hgvEhay1WD
— Mari Selvaraj (@mari_selvaraj) August 18, 2024