மாலத்தீவு கடற்கரையில் பிகினி உடையில் வேதிகா... இணையத்தில் வைரலாக புகைப்படங்கள்...!

vedika
மதராஸி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் வேதிகா. ராகாவா லாரன்ஸ் முனி படத்தை இயக்கிய போது தனக்கு ஜோடியாக வேதிகாவை நடிக்க வைத்தார்.அதை தொடர்ந்து காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, பேட்ட ராப் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் போனார். தெலுங்கும், கன்னடமும் இவருக்கு கை கொடுக்க அந்த மொழியில் பல படங்களிலும் நடித்தார். இப்போது கூட ஒரு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். vedikaமேலும், கஜானா என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலிங் துறையில் சில வருடங்கள் இருந்தார்.சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வப்போது தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற வேதிகா பிகினி உடையில் கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

Share this story