ஹிப் ஹாப் ஆதியின் ‘ வீரன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.

photo

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

photo

 பாடகர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகதிறமை கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி. ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்து இசையமைப்பாளராக வலம் வந்த ஹிப்ஹாப் ஆதி. மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் வீரன் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

photo

 போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக வீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜுன் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்பதை அறிவித்து மாஸ்ஸான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story