‘வீர தீர சூரன்’ படத்தின் 2 வது பாடல் நாளை ரிலீஸ்

விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் 2 வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விக்ரம் கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 ஆவது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
#AathiAdiAathi the second single from #VeeraDheeraSooran will be released on March 5th ❤️🎶
— HR Pictures (@hr_pictures) March 3, 2025
Grand release on March 27th in theatres! 💥#VeeraDheeraSooranFromMarch27
An S.U. Arun Kumar Picture 🎬
A @gvprakash musical 🪈🎶
Produced by @hr_pictures @riyashibu_ @chiyaan… pic.twitter.com/yCEOsFrrQF
மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்திக், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கல்லூரும் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாடலான "ஆத்தி அடி ஆத்தி" பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.