'வீர தீர சூரன்' படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு... விக்ரம் & இயக்குனர் அருண்குமாரை கெளரவித்த படக்குழு...!

vikram

`வீர தீர சூரன்' படத்தின் இயக்குனர் அருண்குமார் மற்றும் நடிகர் விக்ரமை தயாரிப்பாளர் ஷிபு தமீன் உள்ளிட்ட படக்குழுவினர் கெளரவித்துள்ளனர். 

 
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக `வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ’வீர தீர சூரன்’ படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படங்களை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.

 



சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளதால் இந்த வார இறுதியில  திரைப்படம் பல கோடிகளை வசூலிப்பது உறுதி என கூறப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் அதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் அருண்குமார் மற்றும் நடிகர் விக்ரமை கெளரவிக்கும் வகையில் தயாரிப்பாளர் ஷிபு தமீன், விநியோகஸ்தர் five star செந்தில், கதிரேசன் உள்ளிட்டோர் ஆள் உயர மாலை அணிவித்து மகிழ்ந்தனர். 

Share this story