'வீர தீர சூரன்' படத்திற்கு யு/ஏ சான்று

விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள 'வீர தீர சூரன்' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கியுள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
#VeeraDheeraSooran censored U/A - #Kaali aatam in theatres from this March 27th!
— HR Pictures (@hr_pictures) March 22, 2025
An #SUArunKumar Picture 🎬
A @gvprakash musical 🪈🎶
Produced by @hr_pictures @riyashibu_ @chiyaan @iam_SJSuryah #surajvenjaramoodu @officialdushara @thenieswar @editor_prasanna @5starsenthilk… pic.twitter.com/cNh2zEIMkm
'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. டிரெய்லர் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது மேலும் படத்தின் ரன் டைம் 2.30 மணி நேரமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.