'வீர தீர சூரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!

'வீர தீர சூரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் இரண்டாவது பாகம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் நடித்துள்ளார்கள்.
One night. No rules. Only survival. A night that will change everything. 🔥#VeeraDheeraSooranOnPrime, April 24 pic.twitter.com/os8pfrjyUJ
— prime video IN (@PrimeVideoIN) April 18, 2025
ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவான இந்தப் படம் நிதி பிரச்னையால் வெளியான அன்று முதல் 2 காட்சிகள் திரையிடப்படாமல் முதல் காட்சி மாலை 4 மணிக்குதான் வெளியானது. அதிரடியான ஆக்சன் படமாக உருவாகியிருந்த வீர தீர சூரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வீர தீர சூரன் திரைப்படம் ஒரு வார முடிவில் ரூ. 52 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், வீர தீர சூரன் -2 ஏப்.24ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.