30 லட்சம் பார்வைகளை கடந்த வீர தீர சூரன் படத்தின் "ஆத்தி அடி ஆத்தி" பாடல்
1741516444059

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விக்ரம் கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 ஆவது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்திக், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கல்லூரும் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாடலான "ஆத்தி அடி ஆத்தி" அண்மையில் வெளியானது. அப்பாடல் இணையத்தில் 30 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
It's 3 Million views for #AaathiAdiAaathi from #VeeraDheeraSooran ❤
— HR Pictures (@hr_pictures) March 9, 2025
Watch Now:https://t.co/hYTzGyZGDg
An #SUArunKumar Picture 🎬
A @gvprakash musical 🪈🎶
Produced by @hr_pictures @riyashibu_ @chiyaan @iam_SJSuryah #surajvenjaramoodu @officialdushara @thenieswar… pic.twitter.com/NmkzLWP3vT