`வீர தீர சூரன்' வெற்றி...ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்ட நடிகர் விக்ரம்...!

`வீர தீர சூரன்' திரைபபடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு நன்றி கூறி நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.
#ChiyaanVikram reminisces the journey of #VeeraDheeraSooran and extends heartfelt thanks to the audiences for the love shown towards the blockbuster ❤️🔥@chiyaan pic.twitter.com/sBQfaC6RUb
— Yuvraaj (@proyuvraaj) April 4, 2025
திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தை இந்தளவு வெற்றி திரைப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து விக்ரம் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் "இப்படம் வெளியாக இருந்த சிக்கல்கள் உங்களுக்கே தெரியும். எனது ரசிகர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன் அப்படி ஒரு திரைப்படமாக இது அமைந்தது. படத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்." என கூறியுள்ளார்.