வீரப்பன் மகள் விஜயலெட்சுமியின் முதல் திரைப்படம் ‘மாவீரன் பிள்ளை’ – இசை வெளியீட்டு விழா.

photo

வீரப்பனின் மகள் விஜயலெட்சுமி முதல் முறையாக நடித்துள்ள ‘மாவீரன் பிள்ளை’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில்  நடந்துள்ளது.

photo

கே.என்.ஆர் மூவிஸ் சார்பாக ராஜா தயாரித்து,அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன் பிள்ளை’ இந்த படத்தில் மறைந்த மாவீரன் மகள் விஜய்லெட்சுமி கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவரகளுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்துள்ளார்.

photo

 ‘மாவீரன் பிள்ளை’ படத்தின் இசை வெளியீடு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி கலந்து கொண்டார், தொடர்ந்து இயக்குநர் பேரரசு, நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

photo

 

விழாவில் பேசிய விஜயலெட்சுமி, “சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்என்று கூறினார்.

photo

 

தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் யார் எனப் பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள். படம் என்ன கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள். நம் ஊரில் முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம்வீரப்பன் மகளும் நடிக்கலாம்சினிமா யார் என்றாலும் ஏற்றுக்கொள்ளும்.” என பேசினார்.

Share this story